கடந்த சில தினங்களுக்கு மர்மமான முறையில் காணாமல் போன ஆடவர் ஒருவர், கோலாலம்பூருக்கு செல்லும் Bukit Jalil நெடுஞ்சாலை அருகில் ஒரு கால்வாயில் காருடன் இறந்து கிடந்தது இன்று கண்டு பிடிக்கப்பட்டது.
40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் பயணித்த BMW கார் விபத்துக்குள்ளாகி, கால்வாயில் விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கால்வாயில் கார் கிடப்பது தொடர்பில் இன்று பிற்பகல் 3.01 மணியளவில் ஓர் அவசர அழைப்பை தீயணைப்பு, மீட்புப்படையினர் பெற்றதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
மேல் விசாரணைக்கு ஏதுவாக சடலம், போலீஸ் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








