ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.20-
பினாங்கு மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் நில வரி 200 விழுக்காடு வரை உயர்த்துவதற்கு மாநில அரசு எடுத்துள்ள முடிவு மக்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தலாம் என்று மசீச. தெரிவித்துள்ளது.
நில வரியை 29 முதல் 200 விழுக்காடு வரை உயர்த்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவானது, பினாங்கில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள், சமய வழிபாட்டுத் தளங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று லட்சத்து 70 ஆயிரம் நில உரிமையாளர்களுக்கு இது நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்று பினாங்கு மாநில மசீச தலைவர் டத்தோ டான் தெய்க் செங் தெரிவித்தார்.
நில வரி உயர்வு, கடந்த 31 ஆண்டு காலமாக உயர்த்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது என்று பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் கூறினாலும், பினாங்கு மக்கள் பொருளாதார அழுத்தத்தை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் நில உரியை உயர்த்துவது என்பது பொருத்தமற்றது என்று டத்தோ டான் குறிப்பிட்டார்.








