Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பள்ளி மாணவர்களுக்கு வாக்களிப்பு பயிற்சிகள்
தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு வாக்களிப்பு பயிற்சிகள்

Share:

நாட்டின் வாக்களிப்பு முறை பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க தகவல் இலாகா, மாநில கல்வி இலாகா மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து பள்ளி தோறும் ப​யிற்சிகளை நடத்தும் என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார். தற்போது தகவல் இலாகாவின் மேற்பார்வையில் உள்ள கிளாப் மலேசியாக்கு மன்றத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள பள்ளி மாணவர்களுக்கு இப்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

18 வயதை அடைந்தவர்கள் இயல்பாகவே வாக்காளர்களாக பதிவாகும் நடைமுறையைத் தொடர்ந்து வாக்களிப்பின் மகத்துவம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விள​க்குவதற்கு தகவல் இலாகா இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளதாக தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

பினாங்கில் 39 பள்ளிகளிலும், நாடு தழுவிய நிலையில் 89 பள்ளிகளிலும் இப்பயிற்சிகள் நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த பயிற்சிக்காக பிரத்தியேகமாக பாட அமைப்பு முறை உருவாக்கப்பட்டு இருப்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். தவிர, இந்த பயிற்சி கட்டம் கட்டமாக எல்லா பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்படும் என்பதையும் தியோ நீ சிங் விளக்கினார்.

Related News