Mar 17, 2026
Thisaigal NewsYouTube
தாயை ஸ்டீயரிங் வீலால் தாக்கிய நபர் கைது
தற்போதைய செய்திகள்

தாயை ஸ்டீயரிங் வீலால் தாக்கிய நபர் கைது

Share:

கோலாலம்பூர் ,பிப்ரவரி 22 -

36 வயதுடைய ஆடவர் ஒருவர் தனது தாயாரை ஸ்டீயரிங் வீலால் அடித்து படுங்காயங்களுக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக போலீசார் கைது செய்தனர்.

அந்நபர் தனது அறைக்கு செல்ல முற்பட்ட போது கதவின் முன் இடையூறு விளைவிக்கும் வகையில் காலணி அலமாரி இருந்ததாகவும் ஆத்திரமடைந்து உறங்கி கொண்டிருந்த தாயை அடித்ததாகவும் தெரியவந்துள்ளது.

இன்று நள்ளிரவு 12:30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 74 வயதுடைய மூதாட்டியை பற்கள் உடைந்து, தலையில் படுங்காயம் ஏற்பட்டிருக்கும் நிலையில் காணப்பட்டதாக அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர்ஆசம் இஸ்மாயில் கூறினார்.

இச்சம்பவத்தின் போது அந்நபரின் 30 வயதுடைய சகோதரர் தனது அண்ணனை சமாதானப்படுத்த முன்வந்த வேளையில் அவருக்கும் காயம் ஏற்பட்டிருப்பதாக ஓர் அறிக்கையில் ஆசம் இஸ்மாயில் விளக்கினார்.

இதுக்குறித்து அந்நபர் கைது செய்யப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றவியல் சட்டம் 326 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆசம் இஸ்மாயில் அறிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

தாயை ஸ்டீயரிங் வீலால் தாக்கிய நபர் கைது | Thisaigal News