Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மக்களின் குரல்களை அரசு எப்போதுமே செவிமடுத்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மக்களின் குரல்களை அரசு எப்போதுமே செவிமடுத்துள்ளது

கோலாலம்பூர், ஜூன்.28-

ஜுலை மாதம் அறிமுகமாகும் எஸ்எஸ்டி வரியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பழவகைகளுக்கு விலக்களிக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கையானது, மக்களைக் குரலை மடானி அரசாங்கம் எப்போதுமே செவிமடுத்து வந்துள்ளது என்பதற்கு சான்றாகும் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக நிதி அமைச்சு ஒரு விவகாரத்தை அறிவிக்கும் போது மக்கள் குரலை முதலில் செவிமடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்றும் அதிலிருந்து ஒரு போதும் விலகி செல்லாது என்றும் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழவகைகளுக்கு எஸ்எஸ்டி வரி விதிப்பு இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்து இருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோ ஃபாமி மேற்கண்டவாறு கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →