கோலாலம்பூர், ஆகஸ்ட்.09-
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று மாலையில் கோலாலம்பூர் மாநகரில் நடைபெற்ற பேரணியில் இரவு 7 மணி வரையில் சுமார் 2 ஆயிரம் பேர் திரண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரணி மாலை 5.30 மணிக்குத் தொடங்கியது. மஸ்ஜிட் நெகாரா, மஸ்ஜிட் ஜமேக் சுல்தான் அப்துல் சமாட் மற்றும் சோகோ பேரங்காடி ஆகிய பகுதியிலிருந்து, டத்தாரான் மெர்டேக்காவை நோக்கிப் பேரணி தொடங்கியது.
பாலஸ்தீனத்திற்கு விடுதலைக் கோரி பல்வேறு சுலோக அட்டைகள் மற்றும் பதாகைகளை ஏந்திய வண்ணம் மக்கள் ஊர்வலமாகச் சென்றனர்.








