Jul 10, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு - அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு
தற்போதைய செய்திகள்

அடுத்த பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு - அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு

Share:

அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரை ஒற்றுமை அரசாங்கத்திற்கு அம்னோ தமது ஆதரவை தொடர்ந்து வழங்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அஷ்ரப் வாஜ்டி டசூக்கி தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு வாஜ்டி டசூக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலனை முன்னிறுத்தும் வகையில் எந்த அரசியல் கட்சியுடனும் ஒத்துழைப்பு வழங்க அம்னோ தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அரசியல் ஒத்துழைப்பும், நேர்மையும், கூட்டணிக் கட்சிகளிடையே பரஸ்பர நம்பிக்கை என்ற அடிப்படைக் கொள்கைகளின் படி அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில் எதிர்வரும் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்கள் உட்பட எந்தத் தேர்தலிலும் தனது நிலைப்பாடு மற்றும் அரசியல் திசையைத் தீர்மானிக்கும் உரிமை அம்னோவுக்கு இருப்பதாக வாஜ்டி டசூக்கி தெரிவித்துள்ளார்.

மேலும், ஜோகூர் மாநில அரசாங்கமானது கூட்டரசு மட்டத்தில் ஒற்றுமை அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கு முன்னரே பக்காத்தான் ஹராப்பான் கட்சிகள் இல்லாமல் அமைக்கப்பட்டதாகவும் அவர் விவரித்துள்ளார்.

எனவே, மாநில அரசியல் சூழ்நிலைகளையும், உள்ளூர் தேவைகளையும் கருத்தில் கொண்டு, தேர்தல்களில் அம்னோ தனது சொந்த அணுகுமுறையை வகுக்கும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதாக வாஜ்டி டசூக்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், ஒற்றுமை அரசாங்கத்திற்கான தனது தற்போதைய ஆதரவை அம்னோ மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், எதிர்கால அரசியல் கூட்டணிகளுக்கான வாயில்களையும் திறந்தே வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்