Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஆசிரியர்களின் மதிப்பை மீட்டெடுக்க வேண்டும் - பினாங்கில் பொதுமக்கள் பேரணி!
தற்போதைய செய்திகள்

ஆசிரியர்களின் மதிப்பை மீட்டெடுக்க வேண்டும் - பினாங்கில் பொதுமக்கள் பேரணி!

Share:

ஜார்ஜ்டவுன், அக்டோபர்.26-

மாணவரைப் பிரம்பால் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று ஒரு பள்ளியின் வளாகத்தில் சுமார் 300 பேர் திரண்டனர். அங்கிள் கெந்தாங் என்று அறியப்படும் சமூக செயற்பாட்டாளர் குவான் சீ ஹெங் ஏற்பாடு செய்த இந்தப் பேரணியில், ஆசிரியர்கள் மீதான மரியாதை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

"ஆசிரியர்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்தாதீர்கள்", "உங்களுக்குக் கற்பித்தவர்களை மதியுங்கள்" போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் ஆசிரியர் சமூகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். தேசிய ஆசிரியர் சேவைகள் சங்கம் – என்யுடிபி, இந்த நடவடிக்கையை ஆதரித்ததுடன், ஆசிரியர்களுக்கு நியாயமான முறையில் மதிப்பளிக்கவும், பள்ளிகளில் பிரம்படி வழங்கும் கொள்கையை மறுபரிசீலனை செய்யவும் கோரிக்கை விடுத்தது. ஆசிரியர்கள் பயமின்றித் தங்கள் கடமைகளைச் செய்ய அனுமதிக்கும் வகையில், அவர்களின் பங்கு மற்றும் அதிகாரத்தின் வரம்புகளைச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்று என்யுடிபி பொதுச் செயலாளர் ஃபாட்லி அஹ்மாட் வலியுறுத்தினார்.

Related News