அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின் , தமது தலைமையிலான பெர்சத்து கட்சியில் இணைவாரேயானால் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெர்சத்து கட்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நிபந்தனையுடன் கூடிய அழைப்பை விடுத்துள்ளார்.
பெர்சத்து கட்சியில் ஓர் உறுப்பினராக கைரி ஜமாலுடின் இணைந்தால் மட்டுமே போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் நிபந்தனை விதித்துள்ளதாக பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் ரசாலி இட்ரீஸ் தெரிவித்துள்ளார்.
கைரி தமது உறுப்பினர் விண்ணப்பத்தை முதலில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பிறகு அவர் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை கட்சியின் தலைமை மட்டுமே நிர்ணயிக்க முடியும் என்றும் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ரசாலி இட்ரீஸ் குறிப்பிட்டார்.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


