மலாக்கா, செப்டம்பர்.28-
மலாக்கா மாநிலம் சுற்றுலாத்துறையில் புதிய உச்சத்தைத் தொடத் தயாராகிறது! இந்த ஆண்டு இறுதியில் 'மலாக்காவிற்கு வருகை தரும் ஆண்டு 2.0' திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இந்த முறை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், 800-க்கும் மேற்பட்ட புதிய சுற்றுலா அம்சங்களுடன், அதிகப் போட்டித்தன்மை கொண்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என மலாக்கா மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரவுஃப் யுசோ தெரிவித்தார். இது உள்நாட்டுப் பயணிகள் மட்டும் இன்றி வெளிநாட்டுப் பயணிகளுக்கும் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதுடன், 2026 ஆம் ஆண்டுக்கான மலாக்காவின் சுற்றுலா இலக்கை எட்டவும் உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.








