தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் நலனபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று ஜுன் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் பூசோங், ஜாலான் மஸ்ஜீட் படு 14 கம்போங் பாஹாரு, டேவான் ஹங் மிங் சீனப்பள்ளி மண்டபத்தில் விருந்து உபசரிப்பு நிகழ்வு நடைபெற்றது.
பல்வேறு சமூக காரியங்களுக்காக நிதி திரட்டும் நோக்கில் சங்கத்தின் தலைவர் டத்தோ கணேசன் M. கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விருந்து உபசரிப்பு நிகழ்விற்கு மனித நேய மாமணி ரத்தினவள்ளி அம்மாள், அவரின் கணவர் விஜயராஜ், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ், செனட்டர் சி. சிவராஜ், சபாய் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ், மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியத்தின் மூத்த உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் யாக்கோப் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
ரத்தினவள்ளி அம்மாள், நிகழ்வை குத்துவிளக்கேற்றி மங்கலகரமாக தொடக்கி வைத்தார். ஆடல், பாடல் என பல்வேறு கலைநிகழ்வுடன் நடைபெற்ற இந்த விருந்து உபசரிப்பில் சுமார் 1,200 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுத் தலைவரான டத்தோ கணேசன் எம். கிருஷ்ணன் கூறுகையில் சிரமத்தில் உள்ள சங்கத்தின் உறுப்பினர்களுக்கு உதவும் அதேவேளையில் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கும், நோய்வாய்ப்பட்டுள்ள வசதி குறைந்த மக்களுக்கும் உதவும் நோக்கில் இந்த நிதி திரட்டும் விருந்து உபசரிப்பை சங்கம் ஏற்பாடு செய்ததாக குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


