Oct 2, 2026
Thisaigal NewsYouTube

செபூத்தே, தாமான் யுனைடெட் அடுக்ககத்தில் நிலச்சரிவு: பாதிக்கப்பட்டோருக்குத் தற்காலிக வீடு!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
செபூத்தே, தாமான் யுனைடெட் அடுக்ககத்தில் நிலச்சரிவு: பாதிக்கப்பட்டோருக்குத் தற்காலிக வீடு!

கோலாலம்பூர், நவம்பர்.30-

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி செபூத்தே, தாமான் யுனைடெட் அடுக்ககத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆபத்தில் உள்ள 52 குடியிருப்பாளர்களுக்குத் தற்காலிக வீடுகளை வழங்கக் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் தயாராக உள்ளது. பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அருகில் சீரமைப்பும் பழுதுபார்க்கும் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டப. இந்தப் பணிகள் சுமார் ஒரு மாத காலத்திற்குள், அதாவது டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தஃபா தெரிவித்தார்.

குடியிருப்புகள் 40 ஆண்டுகளைத் தாண்டியிருத்தல், அருகில் நடக்கும் கட்டுமானப் பணிகளும் வேர்கள் ஆழமாகச் சென்ற மரங்களாலும் நிலச்சரிவு ஏற்படக் காரணமாக இருக்கலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தப் பணிகள் வெற்றிகரமாக முடிந்தால், குடியிருப்பாளர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் ஸாலிஹா உறுதிப்படுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

ஜோகூரில் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 1,346 வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை

ஜோகூரில் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 1,346 வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை