Oct 9, 2026
Thisaigal NewsYouTube

கணவர் மாண்டார், மனைவி இரு பிள்ளைகள் படுகாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கணவர் மாண்டார், மனைவி இரு பிள்ளைகள் படுகாயம்

கப்பாளா பாத்தாஸ், ஜூன்.27-

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரைச் செலுத்திய கணவர் மரணம் அடைந்த வேளையில் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 7.53 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 127.8 ஆவது கிலோமீட்டரில் கப்பாளா பாத்தாஸ் அருகில் நிகழ்ந்தது.

இதில் 33 வயது வான் ஷாமிலுடின் வான் ராட்ஸி என்பவரே கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது. அவரின் 31 வயது மனைவி மற்றும் 6, 8 வயதுடைய இரு பிள்ளைகள் கடும் காயங்களுக்கு ஆளானதாக தீயணைப்பு மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →