இலங்கையை சேர்ந்த சிறாரை தங்களின் சொந்தப் பிள்ளையைப் போல் அடையாளப்படுத்தி, மலேசிய கடப்பிதழை பெறுவதற்கு முயற்சி செய்த மலேசியாவை சேர்ந்த ஒரு தம்பதியரை குடிநுழைவு இலாகா கைது செய்துள்ளது.
இலங்கை சிறார்களை பிரிட்டன், கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவதற்கு மலேசியா ஒரு தளமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டு மத்தியில் அனைத்துலக கடத்தல் கும்பலிடமிருந்து பெரும் பணத்தை பெறுவதற்காக அந்த மலேசிய தம்பதியர் இத்தகைய மோசடி வேலைகளில ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
ஜோகூர், கூலாய் குடிநுழைவு இலாகாவில் அந்த இலங்கை சிறாருக்கு கடப்பிதழை பெறுவதற்கு அந்த மலேசிய தம்பதியர் விண்ணப்பம் சமர்ப்பித்த போது அவர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர் என்று ஜோகூர் குடிநுழைவு இலாகா இயக்குநர் பஹாருடின் தாஹிர் தெரிவித்துள்ளார்.
அந்த சிறாரிடம் சில மலாய் மொழில் முன்வைக்கப்பட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை. அனைத்து கேள்விகளுக்கும் அந்த தம்பதியர் பதில் சொன்னது மூலம் அவர்களின் மோசடி வேலை அம்பலமானதாக பஹாருடின் தாஹிர் குறிப்பிட்டார்.








