அண்மையில் சி.என்.என் தொலைக்காட்சிக்கு தாம் அளித்த பேட்டியை தணிக்கை செய்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் சதிக்கார கும்பலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.
அந்த உலக செய்தி நிறுவனத்திற்கு தாம் அளித்த பேட்டியில் நாட்டின் பொருளாதார விவகாரம் தொடர்பாக தாம் பேசிய கருத்தை முழுமையாக வெளியிடாமல் அதில் தணிக்கை செய்து, தங்களுக்கு வேண்டிய எதிர்மறையான விஷயங்களை மட்டும் தொகுத்து, கும்பல் ஒன்று சதி வேலை புரிந்த இருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்தை திறம்பட நிர்வகிக்க முடியாமல் தாம் தடுமாறி வருவதைப் போல சி.என்.என் க்கு பேட்டி அளித்து இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ செரி ஹம்சா சைனுட்டின் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்து சி.என்.என் நேர்காணலில் அதன் தலைமை நிருபர் கிறிஸ்டியன் அமன்பூர்க்கு தாம் அளித்த பேட்டியை முழுமையாக கேட்கும்படி ஹம்ஸா ஸைனுடீக்கு பிரதமர் அன்வார் ஆலோசனை கூறினார்.
தணிக்கை செய்யப்பட்ட, அரைகுறையாக வெளியாகியுள்ள காணொளியை மட்டும் பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வந்த விட வேண்டாம் என்பதையும் அந்த எதிர்கட்சித் தலைவருக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்தினார்.








