ஜார்ஜ்டவுன், நவம்பர்.04-
பினாங்கு, பாயான் லெப்பாஸ், சுங்கை ஆரா, ஜாலான் டத்தோ இஸ்மாயில் ஹாஷிம் சாலையில் திடீரென்று ஏற்பட்ட பெருங்குழி வாகனமோட்டிகளை அச்சம் அடையச் செய்துள்ளது.
நில அமிழ்வு போல் காணப்பட்ட அவ்விடத்தில் பெருங்குழி ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று பினாங்கு மாநில போக்குவரத்து மற்றும் இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஸைரில் கீர் ஜொஹாரி தெரிவித்தார்.
சாலையைச் சீர்ப்படுத்தும் பணி தொடங்கப்பட்ட வேளையில் இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்பதை அவர் உறுதிச் செய்துள்ளார்.








