பாலிக் பூலாவ், செப்டம்பர்.04-
மாது ஒருவர் கொண்டோமினியம் வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார். இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 9.20 மணியளவில் பினாங்கு, பாயான் லெப்பாஸில் நிகழ்ந்தது. கார் நிறுத்தும் இடத்தில் விழுந்து மரணமுற்ற அந்த மாது கதாபாத்திரங்களுக்கான அனிமே ஆடையில் காணப்பட்டார்.
அந்த ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியே அதிரும் அளவிற்கு பலத்த சத்தம் கேட்டு, குடியிருப்பாளர்கள் கீழே பார்த்த போது, ஒருவர் இறந்து கிடப்பதைக் கண்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
தொடக்கத்தில் நில அதிர்வு என்று நினைத்து தாங்கள் பீதியில் மூழ்கியதாக அவர்கள் குறிப்பிட்டனர். தடயவியல் சோதனைக்குப் பின்னர் அந்த மாதுவின் உடல் அதிகாலை 12.30 மணியளவில் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.








