Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வாகனமோதலில் ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

வாகனமோதலில் ஆடவர் மரணம்

Share:

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 29.1 ஆவது கிலோ மீட்டரில் ஜோகூர், கூலாய் அருகில் காரும், லோரியும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த இருவரில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் கடும் காயங்களுக்கு ஆளானார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காரின் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் காரை செலுத்திய 31 வயது நபர், கூலாய் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காரின் இடிபாடுகளில் சிக்கிய நபரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

Related News