கோத்தா திங்கி, அக்டோபர்.26-
இன்று நண்பகலில், கோத்தா திங்கியின் ஜாலான் செடிலி பெசாரில் உள்ள கம்போங் செந்திசாவில் நடந்த இரண்டு வாகனங்கள் மோதிய கோர விபத்தில், இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். மேலும் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். புரோட்டோன் வாஜா, பெரோடுவா அல்ஸா ஆகிய வாகனங்கள் மோதிக் கொண்ட இந்த விபத்தில், 70 வயதான புரோட்டோன் வாஜாவின் ஓட்டுநரும், 28 வயதான பெரோடுவா அல்ஸாவின் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கோத்தா திங்கி தீயணைப்பு – மீட்புப் படையின் தலைவர் முகமட் ஷாவாலுடின் அமி நோர்டின் தெரிவித்தார். காயமடைந்த மற்ற ஆறு பேரும், சிகிச்சைக்காக கோத்தா திங்கி மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.








