அலோர் ஸ்டார், அக்டோபர்.27-
கெடா மாநிலத்தில் சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்முறை வழக்குகளில் பெரும்பாலானவை இருவரின் சம்மதத்துடன் நடந்தவை என்று அம்மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையில், மாநிலம் முழுவதும் மொத்தம் 100 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.
அவற்றில் 91 வழக்குகளில், இருவரின் சம்மதத்திலேயே ஏற்பட்ட உறவுகள் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடத்தை மற்றும் உறவுகளை கண்காணிக்க வேண்டிய அவசியத்தில் இருப்பதாகவும் அட்ஸ்லி அபு கவலை தெரிவித்துள்ளார்.








