ஜோகூர் பாரு, டிசம்பர்.01-
ஜோகூர் பாரு மாநகரில் சிறார் மற்றும் முதியோர் இல்லத்தை வழி நடத்தி வரும் தனது அக்காள் பிரிசில்லாவின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று அவரின் 30 வயது தங்கை P. ரதினா வாதிடுகிறார்.
34 வயதுடைய தனது அக்காள் பிரிசில்லா பெருமைக்காக மிகையாகக் கூறியிருக்கிறார்.
குடும்பத்தினரின் அரவணைப்பின்றி 2 வயதிலேயே கைவிடப்பட்ட நிலையில் ஓர் ஆதரவற்ற இல்லத்தில் சேர்க்கப்பட்டு, அந்த இல்லத்தில்தான் தாம் வளர்ந்ததாக தனது அக்காள் பிரிசில்லா கூறியதில் உண்மையில்லை என்று தங்கை ரதினா வாதிடுகிறார்.
பிரிசில்லா, 16 வயது வரை நெகிரி செம்பிலான், தம்பினில் என் தாயார், நான்கு உடன்பிறப்புகளுடன் ஒன்றாகதான் இருந்தார். தாயாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அதன் பிறகு அவருக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று ரதினா விளக்கினார்.
எங்களுடன் இருந்த ஒரு பெண் எவ்வாறு 2 வயதிலிருந்து ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்த இருக்க முடியும் என்று ரதினா வினவினார்.
சிறார் மற்றும் முதியோர் இல்லத்தை வழிநடத்தி வரும் பிரிசில்லா, ஜோகூர்பாருவில் உள்ள மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 69 ஆவது பட்டமளிப்பு விழாவின் விண்வெளிக்கான துறையில் பட்டம் பெற்றார்.
2 வயதிலிருந்து ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்த தாம் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் மாறுப்பட்ட நெருக்கடியை எதிர்நோக்கிய போதிலும் குழந்தைப் பருவதிலேயே குடும்பத்தினாரால் ஒதுக்கப்பட்ட தாம், ஒரு பட்டதாரியாக வேண்டும் என்ற லட்சியம் இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.








