சுகாதார அமைச்சின் ஊழியர்களில் 20 விழுக்காட்டினர் தங்கள் அந்தந்த பணியிடங்கள் மீது எதிர்மறையான உணர்வுகளைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து தகவல் அளித்த சுகாதஆர அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தஃபா குறிப்பிடுகயில், ஒரு இலட்ச ஊழியர்கள் மீது சிறப்பு பணிக்குழு நடத்திய ஆய்வின் மூலம் இந்தத் தகவல் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
60 விழுக்காட்டினர் தங்கள் பணியிடம் குறித்து நல்ல எண்ணத்தைக் கொண்டிருப்பதாகவும் 20 விழுக்காட்டினர் எதிர்மறையான எண்ணத்தைக் கொணிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், எஞ்சிய 20 விழுக்காட்டினர் நடுநிலையான எண்ணத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வு நடத்திய அந்த சிறப்புப் பணிக்குழு பரிந்துரைத்துள்ளது.








