Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பின்னணியில் டத்தோஸ்ரீ ஒருவர் செயல்பட்டுள்ளார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பின்னணியில் டத்தோஸ்ரீ ஒருவர் செயல்பட்டுள்ளார்

கோலாலம்பூர், நவ. 16-


பகாங், குவந்தான் வட்டாரத்தில் அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் பாக்சைட் அலுமினியத் தாது கனிமவள சுரங்க நடவடிக்கையின் வாயிலாக தாதுப்பொருட்கள் எடுக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் டத்தோஸ்ரீ அந்தஸ்தைக்கொண்ட ஒருவர் செயல்பட்டுள்ளார் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

திரெங்கானுவில் கொண்டு சேர்க்கப்பட்ட பாக்சைட் தாதுக்கள், பறிமுதல் செய்யப்படுவதற்கான நிர்ப்பந்த கட்டத்தில் எஸ்.பி.ஆர்.எம். உள்ளது என்று அதன் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

விலைமதிப்புடைய அந்த பாக்சைட் தாதுக்களை பகாங்கிலிருந்து திரெங்கானுவிற்கு கொண்டு செல்வதில் அந்த டத்தோஸ்ரீ மூளையாக இருந்து செயல்பட்டுள்ளார் என்பதுடன் முக்கியப் பங்காற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பெர்மிட் வழங்கப்படாமலேயே பாக்சைட் சுரங்க நடவடிக்கைகள் பெரியளவில் நடந்துள்ளன. இதில் முறைகேடு நிகழ்ந்து இருப்பது தெரியவந்துள்ளதால் இவ்விவகாரம் முழு வீச்சில் தறதற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →