ஜோகூர் பாரு, செப்டம்பர்.05-
ஜோகூர், காஹாங்கையும் மெர்சிங்கையும் இணைக்கும் FT50 பிரதான நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படவிருக்கம் வேளையில் வன விலங்குகள் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி மடிவதைத் தடுக்க அவை கடப்பதற்கென்று தனி வழித்தடங்கள் அமைக்கப்படவிருக்கிறது.
நெடுஞ்சாலையின் மேற்புறம் வனவிலங்குகள் ஒரு மருங்கிலிருந்து இன்னொரு மருங்கிற்குக் கடந்து செல்வதற்கு மேம்பாலம் போன்று வழித்தடம் அமைக்கப்படும்.
இது ஜொகூர் மாநிலத்தில் அமைக்கப்படவிருக்கும் முதலாவது வழித்தடமாகும் என்று மாநில சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.
மலாயா புலிகள், யானைகள், மலாயா தபீர், கரடிகள் முதலிய கொடிய வனவிலங்குகள் வாழ்வியல் இடமான சுமார் 31 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் நெடுஞ்சாலையைக் கடப்பதற்கு அதன் மேற்புறம் 8 மீட்டர் உயரத்தில் 200 மீட்டர் நீளத்தில் சிறப்பு மேம்பாலம் கட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.








