Oct 8, 2026
Thisaigal NewsYouTube

பொந்தியானில் லாரியுடன் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று சகோதரர்கள் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பொந்தியானில் லாரியுடன் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று சகோதரர்கள் பலி

ஜோகூர், பொந்தியான், ஜாலான் பாரிட் ஹாஜி சிராட் பகுதியில் இன்று காலை மோட்டார் சைக்கிள் லாரியுடன் மோதிய விபத்தில் மூன்று சகோதரர்கள் உயிரிழந்தனர்.

காலை 7 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 11 மற்றும் 8 வயதுடைய இரு சிறுவர்களும், 18 வயதுடைய இளைஞரும் உயிரிழந்தனர். மூவரும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைமூட்டம் காரணமாக ஜோகூர் மாநிலம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டிருந்ததை அவர்கள் அறிந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருவதுடன், போலீஸ் துறை விரைவில் அறிக்கை வெளியிடும் என பொந்தியான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹாட்ஸ்ராட் ஹுசேன் மியோன் ஹுசேன் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →