May 7, 2026
Thisaigal NewsYouTube
சாலையைக் கடந்த போது விபத்து: இல்லத்தரசி பரிதாப மரணம்
தற்போதைய செய்திகள்

சாலையைக் கடந்த போது விபத்து: இல்லத்தரசி பரிதாப மரணம்

Share:

அலோர் ஸ்டார், பிப்ரவரி.18-

அலோர் ஸ்டார், டாருல் அமான் நெடுஞ்சாலையில் இன்று காலை 7.30 மணியளவில் சாலையைக் கடந்த 68 வயது இல்லத்தரசி, கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சின் சியோ ஹுவா என்ற அந்தப் பெண்மணி, சாலையின் வலதுபுற தடத்தில் நேராகச் சென்று கொண்டிருந்த புரோட்டோன் சாகா கார் மோதியதில் உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்,

கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சையிட் பஸ்ரி சையிட் அலி இது குறித்து கூறுகையில், 29 வயது இளைஞர் ஓட்டி வந்த கார், Mergong, தாமான் ஸ்ரீ கெமிலாங் பகுதியிலிருந்து ஜித்ரா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பெண்மணி சாலையின் இடது புறத்திலிருந்து வலது புறத்திற்குச் சாலையைக் கடக்க முயன்றுள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார்.

சாலை நேராகவும் வானிலை சீராகவும் இருந்தது. ஆனால், தெருவிளக்குகள் எரியாததால் அந்த இடம் இருட்டாகக் காணப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்மணி வாகனத்திற்கு முன்னால் எதிர்பாராத விதமாக திடீரென சாலையைக் கடந்ததாகத் தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினர் 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினர் 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர்

நெகிரி செம்பிலானில் எந்த நேரத்திலும் தீடீர் தேர்தல் அறிவிக்கப்படலாம் / தயாராக இருக்குமாறு ஆதரவாளர்களுக்கு மந்திரி பெசார் அமினுடின் வேண்டுகோள்

நெகிரி செம்பிலானில் எந்த நேரத்திலும் தீடீர் தேர்தல் அறிவிக்கப்படலாம் / தயாராக இருக்குமாறு ஆதரவாளர்களுக்கு மந்திரி பெசார் அமினுடின் வேண்டுகோள்

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகின்றதா? - மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் காசி மறுப்பு

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகின்றதா? - மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் காசி மறுப்பு

சாஹிட் தொடர்பான டிஎன்ஏஏ விவகாரம்: வழக்கறிஞர் மன்றத்திற்கு சாதகமாக அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு

சாஹிட் தொடர்பான டிஎன்ஏஏ விவகாரம்: வழக்கறிஞர் மன்றத்திற்கு சாதகமாக அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு

மலாக்கா சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை: 5 பிக்பாக்கெட் திருடர்கள் கைது

மலாக்கா சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை: 5 பிக்பாக்கெட் திருடர்கள் கைது

மாமன்னரின் ரஷ்ய பயணம்: 'விக்டரி டே' கொண்டாட்டங்களில் பங்கேற்க மாஸ்கோ சென்றடைந்தார்

மாமன்னரின் ரஷ்ய பயணம்: 'விக்டரி டே' கொண்டாட்டங்களில் பங்கேற்க மாஸ்கோ சென்றடைந்தார்