ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.12-
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர், ஸ்கூடாயில் வீசிய பலத்த காற்றில் பல வீடுகள் சேதமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளின் கூரைகள் பறந்த நிலையில், மழை பெய்ததால் வீடுகளில் உள்ள மின்சாரப் பொருட்கள் சேதமுற்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
ஸ்கூடாயில் தாமான் ஹார்மோனி 1, தாமான் ஶ்ரீ ஸ்கூடாய், கம்போங் போ சீ லெங், தாமான் ஶ்ரீ புத்ரி மற்றும் கம்போங் லாவுட் ஆகியவையே கடுமையாகப் பாதிக்கப்பட்ட வீடமைப்புப் பகுதிகளாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
பலத்த காற்று வீசிய போது பல வீடுளின் கூரைகள் சேதமுற்ற நிலையில் கடும் மழையும் பெய்ததால் மின்சாரப் பொருட்கள் பயன்படுத்த முடியாத அளவிற்குச் சேதமுற்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.








