May 18, 2026
Thisaigal NewsYouTube
படகு கவிழ்ந்து மூவர் மரணம்: போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்தை ஒப்புக் கொண்டார் படகோட்டி
தற்போதைய செய்திகள்

படகு கவிழ்ந்து மூவர் மரணம்: போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்தை ஒப்புக் கொண்டார் படகோட்டி

Share:

ஜெர்தே, ஜூலை.03-

கடந்த வாரம் சனிக்கிழமை இரவு, திரெங்கானு, பூலாவ் பெர்ஹெந்தியான் கடற்பகுதியில் படகு கவிழ்ந்து, மூன்று இந்தியர்கள் உயிரிழந்த சம்பவத்திற்குக் காரணமானவர் என்று கூறப்படும் படகோட்டி, தாம் போதைப்பொருள் உட்கொண்டிருந்த குற்றத்தை ஜெர்தே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஒப்புக் கொண்டார்.

22 வயது அஸ்ரி யாஸிட் என்ற படகோட்டி, 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

கடந்த ஜுன் 29 ஆம் தேதி காலை 10.05 மணியளவில் பெசுட் மாவட்ட போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவு தலைமையகத்தில் அந்த படகோட்டி, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் போதைப்பொருள் உட்கொண்டு இருந்தது உறுதிச் செய்யப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 2 ஆண்டுச் சிறை அல்லது 5 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேற்போகாத அபராதம் விதிக்க வகை செய்யும் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அந்த படகோட்டி குற்றஞ்சாட்டப்பட்டார்.

வழக்கு வரும் செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அந்த படகோட்டியை 2,500 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இரவு 10.30 மணியளவில் படகு கவிழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்தில் பினாங்கைச் சேர்ந்த 40 வயது S. ஆறுமுகம், அவரின் 3 வயது மகள் ஏ. சர்விகா மற்றும் அவர்களின் உறவுக்காரப் பிள்ளையான 10 வயது வி. வெண்பனி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதர இருவர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related News

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு