Apr 7, 2026
Thisaigal NewsYouTube
செந்துல் மூதாட்டி  மரணம்: விசாரணை அறிக்கை சட்டத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
தற்போதைய செய்திகள்

செந்துல் மூதாட்டி மரணம்: விசாரணை அறிக்கை சட்டத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

Share:

கடந்த ஜனவரி 11-ஆம் தேதி பண்டார் பாரு செந்துல் பகுதியில், 85 வயது மூதாட்டி ஒருவர் வாகன மோதி உயிரிழந்த சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையை போலீசார் அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

கடைகளுக்கு முன்னால் இருந்து வலதுபுறம் திரும்பிய கார் ஒன்று, சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட ஓட்டுநர் தப்பியோடவில்லை என போலீசார் தரப்பில் கூறப்பட்டாலும், ஓட்டுநர் பிரேக் போடாமல் மூதாட்டியின் மீது ஏற்றிச் சென்றதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்டத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்காக போலீசார் காத்திருப்பதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை பிரிவுத் தலைவர் ஸம்ஸூரி ஈசா தெரிவித்துள்ளார்.

Related News