Dec 3, 2025
Thisaigal NewsYouTube
புதிய தொழில்நுட்பத்தில் முதலீடுகளை மலேசியா கவர்கிறது
தற்போதைய செய்திகள்

புதிய தொழில்நுட்பத்தில் முதலீடுகளை மலேசியா கவர்கிறது

Share:

நிதி தொழில்நுட்பம், மின் வணிகம் மற்றும் இலக்கவியல் சுகாதாரம் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் முதலீட்டைக் கொண்டு வருவதற்கு அதிகளவில் மலேசியா ஊக்குவிக்கிறது. இதில் புதிய ஊக்குவிப்புகளையும், யோசனைகளையும் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் அடங்கும் என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப ஆரம்பப் பணிகளை ஆதரிப்பதற்கும், அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கும் அரசாங்கம் பல்வேறு ஊக்குவிப்பு மற்றும் மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

கடந்த ஜுன் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இரண்டு தினங்களுக்கு ஷாங்காய் புதிய அனைத்துலக கண்காட்சி மையத்தில் நடைபெற்ற மாநாட்டில் தொழில்நுட்பத்தை இயக்கும் மாற்றம் எனும் தலைப்பில் உரையாற்றுகையில் தியோ நீ சிங் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து 300 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related News