Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பயிற்சியாளர்களின் பின்னணி சரி பார்க்கப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பயிற்சியாளர்களின் பின்னணி சரி பார்க்கப்பட வேண்டும்

கோலாலம்பூர், ஜூன்.21-

சிறுவர் பாலியல் அத்துமீறல் தொடர்பான சமீபத்திய இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து, விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு அவர்களின் பின்னணிச் சரிபார்க்கப்பட வேண்டும் எனவும், உரிமம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் இளைஞர் - விளையாட்டுத் துறை அமைச்சர் ஹான்னா இயோ, வலியுறுத்தியுள்ளார். உரிமத்துடன் கூடிய பயிற்சியாளர்கள் பாதுகாப்பான விளையாட்டுக் கொள்கைகளுக்கு உறுதி பூண்டிருக்க வேண்டும் என்றார்.

பாதுகாப்பான விளையாட்டு விதிகள் 2023அம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, அமைச்சுக்கு 49 முறைகேடு புகார்கள் கிடைத்துள்ளன, அவற்றில் 19 தேசிய விளையாட்டு மன்றத்தைச் சேர்ந்தவர்கள். பாதுகாப்பான விளையாட்டுச் சட்டம் போன்ற உறுதியானச் சட்டங்களை உருவாக்குவதன் மூலம் விளையாட்டு வீரர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →