Oct 9, 2026
Thisaigal NewsYouTube

ஊழலை வேரறுப்பது என்பது கூட்டுக் கடப்பாடாகும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஊழலை வேரறுப்பது என்பது கூட்டுக் கடப்பாடாகும்

கோத்தா கினபாலு, ஜூலை.12-

மலேசியா சபா பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் மற்றும் மொழி மேம்பாட்டு மையத்தில் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி எனும் நேர்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு பாடநெறிமுறைகளை உள்ளடக்கிய பயிற்சித் திட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இரண்டு தினங்களுக்கு நடைபெற்ற இந்த பயிற்சித் திட்டமானது, பங்கேற்பாளர்கள் மத்தியில் நிறுவன அளவில் நேர்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு மதிப்புகளைப் புரிந்து கொள்வதையும் செயல்படுத்துவதையும் வலுப்படுத்தும் முயற்சியாக இருந்தது.

மலேசிய சபா பல்கலைக்கழகத்தில் கெலரி மஜ்லிஸில் நடைபெற்ற இந்தப் பயிற்சித் திட்டத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் சபா மாநில இயக்குனர் டத்தோ கருணாநிதி சுப்பையா கலந்து சிறப்பித்தார்.

ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும், நேர்மையை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் யாவையும், அனைத்து தரப்பினரின் கூட்டுப் பொறுப்பாகும் என்பதை கருணாநிதி தமது உரையில் வலியுறுத்தினார்.

கல்விக் கழகங்கள் உட்பட சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊழலைக் கட்டுப்படுத்துவதில், வேரறுப்பதிலும் அனைவரும் தீவிரமாகப் பங்காற்ற வேண்டும் என்று கருணாநிதி கேட்டுக் கொண்டார்.

நேர்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியானது எஸ்பிஆர் எம்மின் தோள்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு தனிநபரின் கூட்டுப் பொறுப்பாகும் என்று கருணாநிதி தமது உரையில் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →