ஜார்ஜ்டவுன், நவம்பர்.15-
பினாங்கு Tun Dr Lim Chong Eu Expressway சாலையில், கடந்த வியாழக்கிழமை பேருந்துடன், மோட்டார் சைக்கிள் மோதி, 17 வயது இளைஞர் பலியான சம்பவத்தில், போலீஸ் விசாரணைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக Rapid Penang நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலை 11 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, தடம் 303-ல் செல்லும் பேருந்தின் வலது பக்கவாட்டில் மோதிய அந்த இளைஞர், பேருந்தில் சிக்கி பலியானார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் Rapid Penang தெரிவித்துள்ளது.
விசாரணை முடிவுகளுக்காகத் தாங்கள் காத்திருக்கும் அதே வேளையில், நியாயமான முறையில் இவ்விசாரணை நடைபெற, அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் Rapid Penang வலியுறுத்தியுள்ளது.








