Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் நடவடிக்கை அல்ல
தற்போதைய செய்திகள்

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் நடவடிக்கை அல்ல

Share:

உள்ளூர் பச்சரிசி விநியோகப் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கு அந்நிய நாட்டவர்களுக்கு உள்ளூர் பச்சரிசி விற்பனை செய்வதற்கு தடை விதிப்பது ஓர் ஆரோக்கிமான நடவடிக்கை அல்ல என்று மலாக்கா மாநில பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் தகவல் பிரிவு தலைவர் டாக்டர். முகமது அலீஃப் யூசோப் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் அந்நியர்களுக்கு பச்சரிசி விற்பனை செய்யப்படுவதை தடை செய்வது மூலம் அரிசி விநியோகத்திற்கு தீர்வு காணும் சாத்தியம் இல்லை என்பதையும் அவர் விளக்கினார்.
அந்நிய நாட்டவர்களுக்கு உள்ளூர் விளைச்சலுக்குரிய அரிசியை விற்பனை செய்வதால்தான் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறப்படுவது சிந்தனைக்கு ஏற்புடைய செயல் அல்ல என்பதையும் அவர் விளக்கினார்.

Related News