Mar 14, 2026
Thisaigal NewsYouTube
பொதுப் பல்கலைக்கழகங்களில் 81 சதவிகிதம் பூமி புத்ராக்கள்
தற்போதைய செய்திகள்

பொதுப் பல்கலைக்கழகங்களில் 81 சதவிகிதம் பூமி புத்ராக்கள்

Share:

மலேசியப் பொது பல்கலைக்கழகங்களீல் 81.9 சதவிகிதம் பூமி புத்ராக்களும் 18.1 விழுக்காட்டினர் பூமி புத்ரா அல்லாத மாணவர்கள் பயில்கிறார்கள் என உயர்க்கல்வி அமைச்சர் காலிட் நோர்டின் தகவல் வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தில், தேசிய முன்னணியைச் சேர்ந்த ஆயேட் ஈத்தாம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மசீச வின் தலைவருமான வீ கா சியோங் எழுப்பிய வாய்மொழிக் கேள்விக்கு, காலிட் நோர்டின் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கயில், இத்தகவலைக் குறிப்பிட்டார்.

இதனை வீ கா சியோங், தமது சமூக ஊடகப் பக்கத்தில் நேற்று பகிர்ந்தார்.

இந்தத் தகவலை MyMoheS எனப்படும் கல்வி அமைச்சின் தகவல் திரட்டில் இருந்து கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான தரவு என காலிட் மேலும் சொன்னார்.

Related News