Jun 30, 2026
Thisaigal NewsYouTube
சிறுமி பாலியல் வன்கொடுமை - சட்டமன்ற உறுப்பினரின் மகன் கைது
தற்போதைய செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை - சட்டமன்ற உறுப்பினரின் மகன் கைது

Share:

மாரான், மார்ச்.22-

பகாங், மாரான் பகுதியில் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 வயது இளைஞர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர், ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மகன் என்று மலாய் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாரான் மாவட்ட போலீஸ் தலைவர் Wong Kim Wai உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தச் சிறுமி, நகருக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது, மாரானில் உள்ள ஒரு வீட்டில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் மேல் விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ள Wong Kim Wai, தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

Related News