Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கிள்ளானில் அதிரடி சோதனையை நடத்தியது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிள்ளானில் அதிரடி சோதனையை நடத்தியது

டிச.6-

நேற்று மலேசிய உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு ஒரே நேரத்தில், கிள்ளானில் ஒரு வணிக மையத்திலும் செரெண்டாவில் உள்ள ஒரு வீட்டிலும் அதிரடி சோதனையை நடத்தியது. அங்கு போலியான பொருட்களை விற்பனை செய்யப்படுவதாகக் கிடைக்கப்பெற்றத் தகவலின் அடிப்படையில் KITA GEMPUR எனும் சோதனை நடவடடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

செரெண்டாவில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்டச் சோதனையில், போலியான வர்த்தக முத்திரை கொண்ட 500க்கும் மேற்பட்ட பெண்கள் அணியும் கைப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை TIKTOK மூலம் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்பட்டது. இதன் மதிப்பு 17 ஆயிரம் ரிங்கிட்டை எட்டுவதாக Mohd Zuhairi தமதறிக்கையில் குறிப்பிட்டார்.

கிள்ளானில் நடத்தப்பட்டச் சோதனையின்போது, பெண்கள் அணியும் ஆபரணங்கள், கைப்பைகள் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் போலியான வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்தியிருந்தன. 6 ஆயிரத்து 59 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் 20 ஆயிரம் ரிங்கிட்டாகும் என உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில இயக்குநர் Mohd Zuhairi வெளியிட்ட அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.

போலிப் பொருட்களை விற்பனை செய்வது வணீக முத்திரை சட்டம் 2019இன்படி குற்றமாகும். இதற்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். போலிப் பொருட்கள் விற்பனைக்கு எதிரான நடவடிக்கையை அமைச்சு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் பொதுமக்கள் போலிப் பொருட்கள் குறித்து அமைச்சிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் Mohd Zuhairi கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →