Jul 18, 2026
Thisaigal NewsYouTube
கிடங்குகளை குறி வைத்து கொள்ளை : 6 பேர் கொண்ட ரோஹிங்கியா கும்பல் கைது
தற்போதைய செய்திகள்

கிடங்குகளை குறி வைத்து கொள்ளை : 6 பேர் கொண்ட ரோஹிங்கியா கும்பல் கைது

Share:

மலாக்காவில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் 6 ரோஹிங்கியா ஆடவர்கள் கொண்ட கும்பலை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 15-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில், சுங்கை ஊடாங் பகுதியில் உள்ள கட்டுமானப் பொருட்கள் கிடங்கில் இருந்து சுமார் 2 லட்சம் மதிப்பிலான அலுமினியம் ஃபார்ம்வொர்க் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், கடந்த ஜூன் 19-ஆம் தேதி காஜாங் பகுதியில் 'ஆப்ஸ் கார்கோ' என்ற சிறப்பு நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு, 18 முதல் 38 வயதுக்குட்பட்ட 6 ரோஹிங்கியா ஆடவர்களை கைது செய்தனர்.

கொள்ளையின் போது, கிடங்கு காவலரின் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு, அங்கிருக்கும் அலுமினிய கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்வதே, அக்கும்பலின் வழக்கமான செயல்முறையாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related News