Jul 18, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் சிக்கிய ஒருவருக்கு உதவுவதற்காகத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைப் புறக்கணித்து, களத்தில் நின்று உதவியுள்ளார் வேட்பாளர் கார்த்தியாயினி ஜெயபாலன்.
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் சிக்கிய ஒருவருக்கு உதவுவதற்காகத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைப் புறக்கணித்து, களத்தில் நின்று உதவியுள்ளார் வேட்பாளர் கார்த்தியாயினி ஜெயபாலன்.

Share:

அரசியல் தலைவர் லிம் கிட் சியாங் பங்கேற்கும் பொதுக்கூட்டப் பிரச்சாரத்திற்கு கார்த்தியாயினி ஜெயபாலன் சென்று கொண்டிருந்தபோது, குட்ஹோப் விடுதிக்கு முன்பாக அவரது கண்ணெதிரேயே அந்த சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. அதைக் கண்டதும் பதறிப்போன அவர், மறுவிநாடியே தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி, விபத்து நடந்த இடத்திற்கு ஓடோடிச் சென்றுள்ளார். அங்கு துடிதுடித்துக் கொண்டிருந்த அந்த உயிரைக் காப்பாற்ற உடனடியாக அவசர ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்ததோடு, பதற்றத்துடன் விபத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இந்தத் துயரச் செய்தியைப் பகிர வேண்டிய அந்த இக்கட்டான சூழலில், தன் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் கார்த்தியாயினி தவித்துள்ளார். விபத்தில் சிக்கியவரின் உடமைகளைப் பார்த்தபோது நெஞ்சம் உருகி, தாளாத துயரத்துடன் அவர் அப்படியே உடைந்து அழுதுள்ளார். இதனால், தன் அரசியல் கடமைகளை விட அந்த மனித உயிரே முக்கியம் எனக் கருதி, திட்டமிட்டிருந்த அந்தப் பிரச்சாரக் கூட்டத்தையே புறக்கணித்துவிட்டு அவர் அங்கேயே நின்றுள்ளார்.

அரசியல் மற்றும் தேர்தல் பரப்புரைகளை விட மனிதநேயமும், இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் ஒருவருக்கு ஆதரவாக நிற்பதுமே முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் அவரது இந்தச் செயல் அமைந்திருந்தது. விளம்பரத்திற்காகவோ அல்லது வாக்காளர்களைக் கவர்வதற்காகவோ செய்யாமல், விபத்தைக் கண்டதும் உடனடியாக உதவ வேண்டும் என்ற அவரது தூய்மையான மனிதநேயம் தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Related News