Oct 8, 2026
Thisaigal NewsYouTube

உள்ளூர் வணிகர்களின் நலனைப் பாதுகாக்க அந்நியர்கள் இங்கு வணிகம் செய்வதைக் கட்டுப்படுத்த வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உள்ளூர் வணிகர்களின் நலனைப் பாதுகாக்க அந்நியர்கள் இங்கு வணிகம் செய்வதைக் கட்டுப்படுத்த வேண்டும்

ஜார்ஜ்டவுன், ஜூலை.21-

பினாங்கில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்நிய நாட்டவர்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வந்த பொருட்களைக் குறிப்பிட்ட மாதங்களில் விற்பனைச் செய்வதற்கு மாநில அரசு விதித்துள்ள தடையை முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தற்காத்துப் பேசினார்.

நியாயமற்றப் போட்டியிலிருந்து பினாங்கில் உள்ள உள்ளூர் வணிகர்களைப் பாதுகாக்கும் நோக்கில் மாநில அரசு இந்த முடிவை எடுத்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறைப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பினாங்குக்கு வெளியே உள்ள வர்த்தகர்களை நாங்கள் முழுமையாகத் தடை செய்யவில்லை. அவர்கள் பிப்ரவரி முதல் மே மாதம் வரை அல்லது உள்ளூர் வர்த்தகச் சபை அனுமதிக்கும் போதெல்லாம் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன என்று கொம்தாரில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சோவ் கோன் யோவ் கூறினார்.

இந்த விதிமுறை, பினாங்கு இந்திய வர்த்தக, தொழில் சபையின் முறையீடுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டது என்று முதலமைச்சர் விளக்கினார்.

பெரும்பாலும் வெளிநாட்டில் வசிப்பவர்களால் நடத்தப்படும் இந்தியப் பொருட்கள் கண்காட்சிகளில் விற்கப்படும் மலிவான வெளிநாட்டுப் பொருட்களால் தீபாவளி விற்பனை குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவதாக உள்ளூர் வர்த்தகர்கள் புகார் அளித்ததாக சோவ் கோன் யோவ் கூறினார்.

முறையான அனுமதிக்கு விண்ணப்பிப்பது அல்லது வரி செலுத்துவது உள்ளிட்ட பாரம்பரியக் கடைகளைப் போல இந்த கண்காட்சிகளில் வர்த்தகம் செய்பவர்கள் செயல்படுவதில்லை.

பினாங்கு இந்திய வணிகங்கள் வாடகை செலுத்துகின்றனர், வரி செலுத்துகின்றனர். ஒவ்வொரு மாதமும் விற்பனைக்கான ஒரு நல்ல மாதம் அல்ல. வணிகம் செய்ய தீபாவளிக்காக அவர்கள் ஆண்டு முழுவதும் காத்திருக்கிறார்கள்.

ஒரு மாநில அரசாங்கமாக, நாங்கள் எங்கள் உள்ளூர் குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் விளக்கினார்.

கடந்த ஜூலை 9 ஆம் தேதி புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஒரு மாலில் இந்தியப் பொருள் விற்பனைக் கண்காட்சியின் போது செபராங் பிறை மாநகர் மன்ற அதிகாரிகள், தற்காலிக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கும் காட்சியைக் கொண்ட காணொளி வைரலானதைத் தொடர்ந்து முதலமைச்சர் இந்த விளக்கத்தைத் தந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →