நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததுடன் அவரின் மனைவி கடும் காயங்களுக்கு ஆளானார். இச்சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் பேரா, லெங்கோங், மாரா அறிவியல் கல்லூரியின் முன்புறம் பிரதான சாலையில் நிகழ்ந்தது. புரோடுவா மைவி காரில் பயணித்த 65 வயது ஷஹாருதீன் ஒஸ்மான் என்பவர் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டுள்ள வேளையில் அவரின் 53 வயது மனைவி கடும் காயங்களுக்கு ஆளானதாக லெங்கோங் தீயணைப்பு, மீட்புப்படை நிலைய தலைவர் அனுர் ரசாலி தெரிவித்தார்.
இவ்விபத்தில் புரோடுவா அருஸ், தொயோத்தா அவான்சா மற்றம் ஒரு கொள்கலன் லோரி என மேலும் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார். காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட அந்த முதியவரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அனுவார் ரசாலி மேலும் விவரித்தார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


