Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகத்தை நிராகரிப்பீர்- பொது, இளைஞர் அமைப்புகளுக்கு பிரதமர் வேண்டுகோள்
தற்போதைய செய்திகள்

ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகத்தை நிராகரிப்பீர்- பொது, இளைஞர் அமைப்புகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

Share:

ஈப்போ, ஜூலை 8-

ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் அடக்குமுறையை நிராகரிக்கும்படி இந்நாட்டிலுள்ள அரசு சாரா இயக்கங்களான NGO மற்றும் இளைஞர் அமைப்புகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

நபிகள் நாயகம் அவர்கள் வலுவான சமய நம்பிக்கை, மற்றும் உயர் நெறிகள் மூலம் ஊழல் மற்றும் அடக்குமுறையை சமூகத்திலிருந்து ஒழித்து நீதியை நிலை நாட்டியதாக அவர் தெரிவித்தார்.

மக்கள் இத்தகைய குணநலன்களைக் கொண்டவர்களாகவும் ஹிஜ்ராவின் உண்மையான பொருளை உணர்ந்தவர்களாகவும் தங்கள் கௌரவத்தை உயர்த்த உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்பவர்களாகவும் இருந்தால் நாடு முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஹிஜ்ரா என்பது காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகள், அநீதியான, அடக்குமுறை மற்றும் அவதூறான செயல்களைத் துடைத்தொழிப்பதைக் குறிக்கிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே நாம் மாற முடியும். நாட்டையும் மக்களையும் காப்பாற்றக் கூடிய இந்த உணர்வுகளை லிமா ஜெனெரசி மலேசியா என்ற BLG அமைப்பு கொண்டிருக்கும் என தாம் நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு ஈப்போவில் நடைபெற்ற BLG அமைப்பின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்