Dec 2, 2025
Thisaigal NewsYouTube
136 குடிநுழைவு அதிகாரிகள் முறைகேடு புரிந்தனர்
தற்போதைய செய்திகள்

136 குடிநுழைவு அதிகாரிகள் முறைகேடு புரிந்தனர்

Share:

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை மலேசியாவிற்குள் அந்நிய நாட்டவர்கள் சட்டவிரோதமாக நுழைந்தது தொடர்பில் முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் புரிந்தது குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மலேசிய குடிநுழைவுத்துறையை சேர்ந்த 136 அதிகாரிகள் விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷம்ஷூல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 112 பேர், பொது அதிகாரிகளுக்கான உத்தரவை மீறியதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள வேளையில் 24 பேர் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாக துணை அமைச்சர் விளக்கினார்.

Related News