May 24, 2026
Thisaigal NewsYouTube
அந்த சர்ச்சைக்குரிய காணொளி குறித்து விசாரணை செய்வீர்
தற்போதைய செய்திகள்

அந்த சர்ச்சைக்குரிய காணொளி குறித்து விசாரணை செய்வீர்

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 26-

மலேசிய இந்திய சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டக்கூடிய காணொளி ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டது தொடர்பில் போலீசார் துரிதமாக விசாரணை செய்ய வேண்டும் என்று உலகளாவிய மனித உரிமை அமைப்பான GHRF, கோரிக்கை விடுத்துள்ளது.

மலேசியாவில் இந்தியர்கள் என்று ஒரு சமூகம் இல்லை என்று கூறி, வெளியிடப்பட்ட 3 காணொளிகள் தொடர்பில் போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ஓர் அரசாங்க சார்பற்ற அமைப்பான GHRF, போலீஸ் புகார் செய்தது.

மலேசியாவில் தமிழர்கள் என்ற ஒரே இனம் மட்டுமே உள்ளது என்று அந்த காணொளியில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையக்ததில் செய்து கொள்ளப்பட்ட போலீஸ் புகாரில் GHRF தலைவர் S. சசிக்குமார் தெரிவித்தார்.

மலேசியாவில் தமிழர்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் தெலுங்கர்கள், மலையாளிகள், பஞ்சாபியர்கள் மற்றும் இதர இனத்தவர்கள் உள்ளனர் என்ற உண்மையை அறியாமல் மற்றவர்களுக்கு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Related News