பிரதமரை பதவியிலிருந்து நீக்குவதற்கு புதிய சட்டம் ஒன்று இயற்றப்படுவது தொடர்பில் தீர்மானம் ஒன்று சமப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை மேலவைத் தலைவர் தான் ஶ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவான்கு ஜாஃபார் மறுத்துள்ளார். சில தகவல் சாதனங்கள் கூறுவதைப் போல அப்படியொரு பிரேரணை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று வான் ஜுனைடி தெரிவித்தார்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கொண்டு வரப்படக்கூடிய நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்கும், அது குறித்து கருத்து தெரிவிப்பதற்கும் வழிவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கப்படுவது தொடர்பில் ஒரு தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வான் ஜுனாயிடி விளக்கினார்.
தவிர, பிரதமரை நீக்குவதற்கு புதிய சட்டம் தொடர்பான பரிந்துரை என்பது உண்மை அல்ல என்று செய்தியாளர்களுடன் நடத்தப்பட்ட சிறப்பு சந்திப்பின் போது வான் ஜுனாயிடி இதனை தெரிவித்தார்.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


