Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஆவிப் பயணிகளை அனுமதித்தது: 50 குடிநுழைவு அதிகாரிகளிடம் விசாரணை
தற்போதைய செய்திகள்

ஆவிப் பயணிகளை அனுமதித்தது: 50 குடிநுழைவு அதிகாரிகளிடம் விசாரணை

Share:

ஷா ஆலாம், ஆகஸ்ட்.04-

குடிநுழைவுப் பதிவின்றி ஆவிப் பயணிகள் அனுமதிக்கப்பட்ட மோசடிக் கும்பல் தொடர்பில் மலேசிய குடிநுழைவுத் துறையைச் சேர்ந்த 50 அதிகாரிகளிடம் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

குடிநுழைவுத் துறையில் பணியாற்றக்கூடிய ஒவ்வோர் அதிகாரியும் தங்கள் பணியின் போது நேர்மையாகவும், நம்பிக்கையுடைவராகவும் இருப்பதை உறுதிச் செய்ய உயர் நன்னெறி கோட்பாடு அமல்படுத்தப்பட்டு வரும் என்று அவர் குறிப்பிட்டார்.

குடிநுழைவுத் துறையின் கட்டமைப்பு முறையை ஏமாற்றும் நோக்கிலான இத்தகையச் செயல்பாடுகள் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகும் என்று டத்தோ ஸாகாரியா தெரிவித்தார்.

இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டதற்காக குடிநுழைவுத் துறையைச் சேர்ந்த 26 அதிகாரிகள் வேலை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நசுத்தியோன் இஸ்மாயில் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பதில் அளித்து இருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் டத்தோ ஸாகாரியா இதனைக் குறிப்பிட்டார்.

Related News