Nov 2, 2025
Thisaigal NewsYouTube
அலோர் ஸ்டாரில் மைத்துனரின் தலையைத் துண்டித்தாக நம்பப்படும் ஆடவர் கைது!
தற்போதைய செய்திகள்

அலோர் ஸ்டாரில் மைத்துனரின் தலையைத் துண்டித்தாக நம்பப்படும் ஆடவர் கைது!

Share:

அலோர் ஸ்டார், நவம்பர்.01-

அலோர் ஸ்டார், கம்போங் பிடா 3-இல் உள்ள ஒரு நெல் வயலில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, தனது மைத்துனரின் தலையைத் துண்டித்ததாகக் கூறப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஆடவரை 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சித்தி மாஸ்லிஸா முகமட் அலி உத்தரவிட்டுள்ளார்.

38 வயதான அந்த ஆடவர், கொலை குற்றத்திற்காக, தண்டனைச் சட்டம் பிரிவு 302 இன் கீழ், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ரட்ஸி அப்துல் ரஹிம் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்டவரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக சுல்தானா பஹியா மருத்துவமனை தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அப்துல் ரஹிம் குறிப்பிட்டுள்ளார்.

Related News