பாலிங், ஆகஸ்ட்.15-
காணாமல் போனதாகப் புகார் தெரிவிக்கப்பட்ட ஆடவர் ஒருவர், இன்று அதிகாலையில் கெடா, பாலிங், கம்போங் தெலுக் சானாவ்வில் உள்ள நீர் வீழ்ச்சியில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆடவரின் உடல், காட்டுப் பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சியில் கிடப்பதாகப் போலீசிடமிருந்து கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தாங்கள் விரைந்ததாக பாலிங் மாவட்ட தீயணைப்பு நிலையத் தலைவர் ஸுல்கைரி மாட் தஞ்சில் தெரிவித்தார்.
ஒன்பது மீட்டர் உயரத்தில் உள்ள மலைப்பாங்கான காட்டுப் பகுதியில் அந்த ஆடவரின் சடலத்தை மலையடி வாரத்திற்குக் கொண்டு வருவதற்கு தீயணைப்புப் படையினரின் முழு பலம் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த நபர், நீர் வீழ்ச்சியில் செங்குத்தான மலைப் பகுதியில் கால் இடறி கீழே விழுந்து மரணமுற்று இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் மேலும் கூறினார்.








