கோத்தா பாரு, டிசம்பர்.12-
மாச்சாங், கம்போங் புக்கிட் பெலாவில் நேற்று பிற்பகலில், 5 டன் எடையுள்ள இராணுவ லோரியும், புரோட்டோன் வீரா காரும் மோதிக் கொண்ட விபத்தில், இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு, 4 பேர் காயமடைந்தனர்.
இவ்விபத்து குறித்து தங்களுக்கு மாலை 6.51 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், அடுத்த 7 நிமிடங்களில், விபத்து நிகழ்ந்த இடத்தைத் தங்கள் குழுவினர், அடைந்து விட்டதாகவும் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு கமாண்டர் முகமட் ஃபாட்சீல் மூசா தெரிவித்துள்ளார்.
இவ்விபத்தில், புரோட்டோன் வீரா காரில் இருந்தவர் படுகாயமடைந்த நிலையில், 4 இராணுவ வீர்ர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் முகமட் ஃபாட்சீல் மூசா குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், காயமடைந்த மற்ற நால்வரும் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








