கோலாலம்பூர், டிசம்பர்.19-
2025-ஆம் ஆண்டில் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருப்பதாக அனைத்துலக நிதியகமான ஐஎம்எஃப் பாராட்டியுள்ளது.
உலகளாவிய வர்த்தக அழுத்தங்களுக்கு மத்தியிலும் உள்நாட்டு பயனீடு மற்றும் முதலீடு காரணமாக மலேசியா நிலையான வளர்ச்சியை எட்டியுள்ளது என்று அந்த உலக அமைப்பு இன்று புகழாரம் சூட்டிள்ளது.
வர்த்தக உபரியில் மலேசியாவின் மொத்த வர்த்தகம் நவம்பர் வரை 2.8 டிரில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 5.8 விழுக்காடு அதிகமாகும்.
2025-ஆம் ஆண்டில் மலேசியாவின் பொருளாதாரம் 4.6 விழுக்காடு என்ற ஆரோக்கியமான விகிதத்தில் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2026-ஆம் ஆண்டில் இது 4.3 விழுக்காடாக சற்றே குறையக்கூடும்.
வலுவான உள்நாட்டுத் தேவை, முதலீடுகள், வேலை வாய்ப்பு அதிகரிப்பு மற்றும் உலகளாவிய தொழில்நுட்பத் துறையான Tech upcycle முன்னேற்றம் ஆகியவை மலேசியாவின் வளர்ச்சிக்குத் தூண்களாக உள்ளன என்று ஐஎம்எஃப் வியந்து போற்றியுள்ளது.








